தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களை அனுப்புவது தொடர்பான ஆசிரியர் சங்கத்தின் கோரிக்கையை தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய நிராகரித்துள்ளார்.
கல்வி பொதுதரா தர பரீட்சையின் வினாத்தாள்கள் திருத்தும் பணியில் ஈடுபடுவதன் நிமித்தம் தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பிப்புக்காக கால எல்லையை நீடிக்குமாறு இலங்கை ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்திருந்தது.
குறித்த விண்ணப்பங்களை அனுப்ப மேலும் ஒரு வார காலம் தேவையென இலங்கை ஆசிரியர் சங்கம் கோரியிருந்தது.
எனினும், வேட்பு மனுக்கள் தொடர்பான அறிவித்தல் கடந்த 4ஆம் திகதி வெளியிடப்பட்ட அன்றே தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களுக்கான கால எல்லை குறித்து முன்னதாகவே பாடசாலைகளுக்கு அறிவிக்கப்பட்டதாக ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
இதன்காரணமாக குறித்த விண்ணப்பங்களுக்கான காலஎல்லையை நீடிக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.