STF அதிகாரி கொலை முயற்சி -மூவர் கைது

251 0

திவுலப்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பல்லபான சந்தியின் பாய்வத்தைக்கு அருகில் பொலிஸ் விசேட பிரிவின் அதிகாரி ஒருவரை கொலை செய்தவதற்கு சதித்திட்டம் தீட்டிய மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

நேற்று (23) காலை 11.30 மணியளவில் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் கட்டுவெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 33, 35 மற்றும் 39 வயதானவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் மூவரும் இன்றைய தினம் (24) மினுவாங்கொட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Leave a comment