பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கேட்டபாய ராஜபக்ஸ உள்ளிட்ட 8 பேருக்கு எதிராக லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்துள்ளது.
கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் இன்று இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
எவன்காட் மிதக்கும் ஆயுதக்களஞ்சியசாலையை நடத்திச் செல்ல அனுமதி அளித்ததன் மூலம், அரசாங்கத்துக்கு 11.4 பில்லியன் ரூபா நட்டம் ஏற்படுத்தியமை தொடர்பிலேயே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.