ஹெரோய்ன் போதைப் பொருளை வைத்திருந்த பெண் ஒருவர் பொரள்ளை, பேஸ்லைன் மாவத்தை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரிடம் 13 கிராமும் 100 மில்லிகிராம் நிறையுடைய போதைப் பொருள் இருந்ததாக பொலிஸார் கூறியுள்ளனர்.
அதே பிரதேசத்தைச் சேர்ந்த 51 வயதுடைய பெண் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் இன்று மாளிகாகந்தை நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளதுடன், கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுக்கின்றனர்.