ஊரகஸ்மங்சந்தி பிரதேசத்தில் துப்பாக்கியுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் விஷேட அதிரடிப் படையின் திட்டமிட்ட குற்ற ஒழிப்பு பிரிவின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் கூறியுள்ளது.
இதன்போது சந்தேகநபரிடமிருந்து உள்நாட்டுத் தயாரிப்பு துப்பாக்கி ஒன்றும் அதற்கு பயன்படுத்தும் நான்கு தோட்டாக்களும் பொலிஸ் விஷேட அதிரடிப் படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
30 வயதுடைய சந்தேகநபர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் எல்பிட்டிய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டதையடுத்து எதிர்வரும் 03ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.