பொலிதீன் மற்றும் அதனுடன் தொடர்புடைய தயாரிப்புக்களை தடை செய்வதற்கு அரசாங்கம் எடுத்த நடவடிக்கை தோல்வியடைந்துள்ளதாக சுற்றுச்சூழல் நீதிக்கான மையம் கூறுகிறது.
தடை செய்யப்பட்ட பொலிதீன் வகைகள் வேறு விதமாக மீண்டும் பயன்பாட்டிற்கு வந்துள்ளதாக அந்த மையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஹேமந்த விதானகே கூறினார்.
ஏற்கனவே பயன்பாட்டில் இருந்த பொலிதீன் வகையை விட அந்த பொலிதீன் வகைகள் மனித உடலுக்கு பாதகமானது என்று அவர் மேலும் கூறினார்.