பான்கி மூனின் இலங்கை விஜயம் தொடர்பான கால அட்டவணை

357 0

Ban-Ki-moon_2-300x227ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான்கி மூனின் மூன்று நாள் இலங்கை விஜயத்திற்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, அவர் இன்று மாலை 7.15 அளவில் கட்டுநாயக்க வானூர்தி நிலையத்தை வந்தடைவார்.

பின்னர் 8 மணிக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்திக்கவுள்ளார்.

இதனை தொடர்ந்து நாளைய தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை அவர் சந்திக்கின்றார்.

பின்னர், இளைஞர் நிகழ்வொன்றில் பங்குகொள்ளும் பொருட்டு அவர் காலிக்கு விஜயம் செய்யவுள்ளார்.

இன்றைய தினம் இரவு, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவுடன் ராபோசனத்தில் கலந்து கொள்கிறார்.

வெள்ளிக்கிழமை முற்பகல் 9 மணிக்கு சபாநாயகர் கரு ஜயசூரியவை சந்திக்கிறார்.

இதனைத் தொடர்ந்து ‘நீடித்திருக்கும் சமாதானம்’ என்ற தொனிப்பொருளில் சிறப்பு சொற்பொழிவொன்றை கொழும்பில் உள்ள பிரதான விருந்தகம் ஒன்றில் நிகழ்த்தவுள்ளார்.

பின்னர் யாழ்ப்பாணம் செல்லும் அவர், வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, எதிர்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் உள்ளிட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்களையும் சந்திக்க உள்ளார்.

அதனை தொடர்ந்து மீள்குடியேற்ற பகுதிகளுக்கு விஜயம் செய்ய உள்ளார்.

இதனை அடுத்து தமது விஜயத்தின் நிறைவாக செப்டம்பர் 2ஆம் திகதி மாலை 6.30 அளவில் கொழும்பில் ஊடக சந்திப்பொன்றை பான்கி மூன் மேற்கொள்ள உள்ளார்.

அதனை அடுத்து தமது இலங்கை விஜயத்தை நிறைவு செய்து கொண்டு பான்கி மூன்று இரவு 10.30க்கு இலங்கையில் இருந்து புறப்பட்டு, சீனாவில் இடம்பெறவுள்ள ஜீ20 மாநாட்டில் பங்குகொள்ளும் பொருட்டு
சீனா செல்கிறார்.