மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்- ஆறுமுகன் தொண்டமான்

260 0
கடந்த காலங்களில் இழந்த பலத்தை மீண்டும் பெற வேண்டுமானால் 2018ம் ஆண்டு இடம் பெறுகின்ற உள்ளூராட்சி சபை தேர்தலில் எமது மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டுமென இலங்கை தொழிலாளர் காங்கிரசின் பொதுச் செயலாளர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார் .

2018ம் ஆண்டு பெப்ரவரி மாதம் இடம் பெறுகின்ற உள்ளூராட்ச்சி சபை தேர்தலில் சேவல் சின்னத்தில் போட்டியிடும் இலங்கை தொழிலாளர் காங்ரஸ் இன்று சனிக்கிழழை தேர்தல் பிரசாரத்தின் போது டிக்கோயா, பொகவந்தலாவ, சாமிமலை போன்ற பகுதிகளில் உள்ள தோட்டபுறங்களுக்கு சென்று பொதுமக்களை சந்தித்து உறையாற்றிய போதே இதனை தெரிவித்தார் .

இந்த மக்கள் சந்திப்பின் போது இ.தொ.கா. பொதுச்செயலாளர் உட்பட முன்னாள் பாராளுமன்ற ஊறுப்பினர் பி. இராஜதுரை, முன்னாள் நுவரெலியா பிரதேசசபை உறுப்பினர் எஸ். சதாசிவன் மற்றும் பலரும் கலந்து கொண்டனர் .

இதன் போது மேலும் உறையாற்றி பொதுச் செயலாளர் ஆறுமுகன் தொண்டமான்,

கடந்த காலங்களில் மாற்றம் வேண்டுமென மக்கள் வாக்களித்தார்கள். ஆனால் இன்று எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை. மாற்றம் என்று சொன்னால் 2500 ரூபாவிற்காக 88,000 ரூபாவை எமது மக்கள் விட்டு கொடுத்திருக்கிறார்கள்.

இன்று கொழுந்து பறிக்கும் தொழிலாளர்களுக்க 140 ரூபா கிடைப்பதில்லை. தேயிலை கொழுந்து பறிக்கும் தொழிலாளர்களிடம் இருந்து 3 அல்லுது 4 கிலோ கொழுந்தை அதிகமாக தோட்ட நிர்வாகம் பிடித்து வைத்து கொள்கிறது.

இது போன்ற நேரத்தில் தான் புதிய தேர்தல் முறை ஒன்று கொண்டு வரபட்டுள்ளது. குறித்த தொகுதிக்கு யார் நியமிக்கபட்டிருக்கிறோ அந்த நபர்தான் குறிப்பிட்ட பகுதியில் அபிவிருத்தி முதல் அனர்த்தம் வரையான வேலை திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார் .

எனவே வருகின்ற தேர்தலில் அனைத்து மக்களும் ஒன்றிணைந்து ஒற்றுமையாக செயல்பட்டால் மாத்திரம் அடுத்த வருடத்திற்கான கூட்டு ஒப்பந்தத்தில் பலமாக இருந்து பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க முடியும் எனவும் தொண்டமான் குறிப்பிட்டார்.

Leave a comment