வெளிநாட்டில் தலைமறைவாகியுள்ள பிரபல பாதாள உலகக்குழுவின் தலைவரின் மகனின் பெயர் ஐ.தே.க.யின் கொழும்பு மாநகர சபைத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் கொழும்பு மாநகர சபைக்கான வேட்பாளர் பட்டியலில் இணைக்க தயாராக இருந்த ஒருவரின் பெயரையே பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலையிட்டு இவ்வாறு நீக்கியுள்ளார்.