பாகிஸ்தானில் 28 இந்திய மீனவர்கள் கைது

302 0

பாகிஸ்தான் கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்ததாக இந்தியாவை சேர்ந்த 28 மீனவர்களை அந்நாட்டு கடலோரக் காவல் படையினர் கைது செய்துள்ளனர்.

பாகிஸ்தான் கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்ததாக இந்தியாவை சேர்ந்த 28 மீனவர்களை அந்நாட்டு கடலோரக் காவல் படையினர் கைது செய்துள்ளனர்.

அரபுக் கடலில் பாகிஸ்தான் எல்லைக்குட்பட்ட பகுதியில் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்த 28 இந்திய மீனவர்களை நேற்று பாகிஸ்தான் கடலோரக் காவல் படையினர் கைது செய்துள்ளதாகவும், அவர்களுக்கு சொந்தமான 5 படகுகள் சிறைபிடிக்கப்பட்டதாகவும் அந்நாட்டின் கடலோரக் காவல் படை தெரிவித்துள்ளது.

நேற்று முன்தினம் நல்லெண்ண அடிப்படையில் பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் 291 மீனவர்களை விடுதலை செய்ய இருப்பதாக அந்நாட்டு வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் மொகமது பைசல் அறிவித்திருந்தார். அவர்கள் டிசம்பர் 29 மற்றும் அடுத்தாண்டு ஜனவரி 8-ம் தேதிகளில் வாகா எல்லை வழியாக இரு கட்டமாக விடுவிக்கப்பட உள்ளனர். கடந்த அக்டோபர் மாதம் பாகிஸ்தான் சிறைகளில் இருந்த 68 இந்திய மீனவர்கள் விடுவிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment