அமெரிக்க இந்திய ஒப்பந்தம் குறித்து சீனா கவலையடைய தேவையில்லை – அமெரிக்கா

392 0

us-flagஇந்திய அமெரிக்காவிற்கு இடையேயான இராணுவ தளபாடங்கள் பகிர்வு ஒப்பந்தத்தால் சீனா அச்சம் அடையத் வேண்டியதில்லை என அமெரிக்க வெளியுறவு பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் அமெரிக்காவிற்கு இடையிலான உறவை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இந்த முக்கிய ஒப்பந்தம் வாஷிங்டனில் நேற்று கைச்சாந்திடப்பட்டது.

இந்த ஒப்பந்தத்தின் மூலம் இருநாட்டு இராணுவங்களும் பரஸ்பரம் இராணுவ தளங்களையும் தளபாடங்களையும் உபயோகிக்க இந்த ஒப்பந்தம் வழிவகுத்துள்ளது.

இந்த நிலையில் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தம் தங்களுக்கு நெருக்கடியைக் கொடுக்கும் முயற்சி என்று சீனா தெரிவித்துள்ளது.

இந்த நிலையிலேயே பேச்சாளர் இந்த விளக்கத்தைக் கொடுத்துள்ளார்.

இந்தியா மற்றும் அமெரிக்காவிற்கு இடையிலான இந்த ஒப்பந்தம் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையே ஆழமான ஒத்துழைப்புடன் கூடிய உறவு ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இது தவிர, இரு நாடுகளுக்கும் இடையே பொருளாதாரம், வர்த்தகம் தகவல் தொழில்நுட்ப பரிமாற்றல் குறித்து ஏற்கனவே ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த நிலையில், தற்போதைய ஒப்பந்தம் குறித்து எவரும் கவலை கொள்ள வேண்டிய அவசியம் இல்லை எனவும் அமெரிக்க வெளியுறவு பேச்சாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.