நேற்றைய தினமானது சர்வதேச காணாமற்போனோர் நாளாகும். சர்வதேச காணாமற்போனோர் தினம் உலகளாவிய ரீதியில் ஆண்டுதோறும் ஆவணி 30ம் திகதி கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்நாளை முன்னிட்டு இன்றைய தினம் (30.08.2016) யேர்மன் ஈழத்தமிழர் மக்கள் அவையினர் மற்றும் தமிழ் இளையோர் அமைப்பு யேர்மனியினரால் யேர்மனி ஸ்டுட்கார்ட் (Stuttgart) நகரில் கவனயீர்ப்பு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந் நிகழ்வில் கலந்துகொண்ட மக்கள் சிங்கள பௌத்த பேரினவாத அரசுகளினால் காணமல் போகடிக்கப்பட்ட மக்கள், ஊடகவியலாளர்கள், மணிதவுரிமை செயற்பாட்டாளர்கள், தன்னார்வத்தொண்டு நிறுவனப் பணியாளர்களிற்கான நீதியை வலியுறுத்தி குரலெழுப்பியதோடு. இறுதிப்போரின் போது காணாமல் போகடிக்கப்பட்ட 146679 பேரின் நிலை குறித்தும் கேள்வியெழுப்பினார்கள்.
அத்தோடு மௌனமாக அரங்கேறிக்கொண்டிருக்கும் முன்னாள் போராளிகள் மீதான உயிர்க்கொலைகள் தொடர்பாகவும் வேற்றின மக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.சிங்கள பேரினவாத அரசின் படுகொலையை வெளிப்படுத்தும் முகமாக யேர்மன் மொழியில் துண்டுப்பிரசுரமும் பல்லின மக்களுக்கு விநியோகிக்கப்பட்டது.