தமது தண்டனைக்காலம் நிறைவடைந்ததன் பின்னர், வேலைவாய்ப்பு உறுதி என்ற நம்பிக்கையில் திருச்சி மத்திய சிறைச்சாலையில் உள்ள கைதிகள் கணனி இயக்க பாடப்பிரிவில் இணைய ஆர்வம் காட்டி வருகின்றனர்.
தமிழகத்திலுள்ள மத்திய சிறைக்கூடங்களில் உள்ள கைதிகளின் மறுவாழ்விற்காக பல்வேறு தொழில் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.
கணனி இயக்க பாடப்பிரிவு உட்பட ஐந்து பாடப்பிரிவுகள் தற்போது கற்பிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
இந்த பாடவிதானங்கள் அறிமுகப்படுத்தப்பட்ட முதலாவது ஆண்டில் மட்டுமே 168 பேர் தற்போது பயின்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.