சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு சூரிச் மாநில ஏற்பாட்டில், 28.08.2016 ஞாயிற்றுக்கிழமை அன்று சூரிச் Sportanlage Sihlhölzli என்ற மைதானத்தில் முதற்தடவையாக நடைபெற்றது.எதிர்கால சந்ததியினரிடம் தாயகம் நோக்கிய தேடலுடன், விளையாட்டுகளை ஊக்குவித்து உணர்வை, நட்பை வளர்ப்பதோடு, மாநில ரீதியிலான தமிழ் உறவுகளின் தொடர்ச்சியான தொடர்புகளை சுமுகமாக பேணுவதன் ஊடாக மாவீரர்களின் அற்புதமான தியாக நினைவுகளைப் போற்றவும், தமிழ்த் தேசியத்திற்கு வலுச்சேர்க்கவும் இவ் விளையாட்டுப் போட்டிகளானது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
சூரிச் மாநில ரீதியிலாக நடைபெற்ற இவ் விளையாட்டுப் போட்டிகளில் குழந்தைகள், சிறுவர்கள், இளையோர்கள் என ஆர்வத்தோடு பங்குபற்றியதோடு தத்தமது விளையாட்டுத் திறனையும் வெளிக்காட்டியிருந்தனர்.இவ் விளையாட்டுப் போட்டிகள் சிறப்பாக நடைபெற அனைத்து வகைகளிலும் முழு ஒத்துழைப்பு நல்கிய போட்டியாளர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள்;, ஆதரவாளர்கள், சக செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட அனைத்து எமது உறவுகளுக்கும் பாராட்டுதல்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும் என்ற தியாக தீபம் திலீபன் அவர்களின் இலட்சியப் பணியை அனைவரும் ஒன்றிணைந்து வலுப்படுத்திச் செயற்படுத்த அவரது நினைவுநாளான 26.09.2016 திங்கட்கிழமை அன்று ஐ.நா நோக்கி மீண்டுமொருமுறை அணிதிரண்டு தமிழின அழிப்பிற்கு நீதி கேட்க ஆயத்தமாகுமாறு அனைத்து தமிழ் உறவுகளையும் சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு அன்புரிமையுடன் கேட்டுக் கொள்வதோடு மாநிலங்கள் ரீதியிலான போக்குரவத்து ஒழுங்குகளும் செய்யப்பட்டுள்ளது என்பதனையும் இத்தருணத்தில் அறியத் தருகின்றோம்.