வாழ்க்கைச் செலவு தொடர்பிலான பிரச்சினைகளுக்கு தீர்வினை ஏற்படுத்துதல் வெள்ளப்பெருக்கு மற்றும் வரட்சி போன்ற இயற்கை அனர்த்தங்களில் நிவாரணங்களை பெற்றுக் கொடுத்தல் தொடர்பில் பிரதமரினால் முன்வைக்கப்பட்ட 8 அம்சங்கள் அடங்கிய தீர்வுத்திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகச்சந்திப்பு நேற்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது. இதன் போதே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டது.
இதனடிப்படையில் வாழ்க்கைச் செலவு தொடர்பான அமைச்சரவை உப குழு மற்றும் பொருளாதார முகாமைத்துவம் தொடர்பான அமைச்சரவை செயற்குழு ஆகிய குழுக்கள் முன்னெடுத்த கலந்துரையாடல்களில் பல்வேறு தீர்மானங்கள் எட்டப்பட்டுள்ளன. இந்த தீர்மானங்களை எவ்விதமான தடைகளுமின்றி முன்னெடுக்க தேவையான செயன்முறைகளுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. வீட்டு அலகொன்றுக்கு தாக்குப்பிடிக்கக் கூடிய விலையில் அத்தியாவசிய பொருட்களை வழங்குவதை சாராம்சம் செய்வதற்காக உரிய அதிகாரிகள் அடங்கிய ‘குடும்ப வரவு செலவு பிரிவொன்றை’ ஸ்தாபித்தல், குறித்த தீர்மானங்களை செயற்படுத்துவதன் வெற்றியினை உறுதிப்படுத்துவதற்காக நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சின் செயலாளர்களின் தலைமையில் ஏனைய உரிய அமைச்சின் செயலாளர்களுடன் கூடிய ஒருங்கிணைப்பு குழுவொன்றினை நியமித்தல்,
சுப்பர் மார்க்கட், சதொச மற்றும் ஏனைய தனியார் சந்தைகளின் ஊடாக தமிழ், சிங்கள புது வருடம் வரை அத்தியாவசிய உணவு பொருட்கள் உள்ளடங்கிய சலுகை பொதியொன்றை பகிர்ந்தளிப்பதற்கான வேலைத்திட்டமொன்றை செயற்படுத்துதல், அதற்காக பங்குகொள்கின்ற நிறுவனங்கள் மற்றும் சில்லறை வியாபாரிகள் மூலம் செலுத்தப்படுகின்ற வருமான வரியில் 50 வீதத்தை மீள் நிரப்புவதற்கும், மின்சார செலவிற்காக வரிச்சலுகையினை பெற்றுக் கொடுப்பதற்குமான வேலைத்திட்டமொன்றை தயாரித்தல், தேங்காய் இறக்குமதி தொடர்பில் மேற்பார்வை செய்வதற்கான பொறுப்பினை தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சின் செயலாளருக்கு வழங்குதல், தேங்காய் இறக்குமதி தொடர்பில் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் மூலம் பின்பற்றப்படுகின்ற செயன்முறையினை இலங்கையிலும் ஸ்தாபிப்பது தொடர்பில் அவுஸ்திரேலியாவின் ஒத்துழைப்பினை பெற்றுக் கொள்ளல்,
வெள்ள நிவாரணத்துக்காக தேசிய காப்புறுதி நிதியத்தினால் பெற்றுக் கொடுப்பதற்கு இணங்கியுள்ள நட்ட ஈட்டு தொகை மற்றும் மதிப்பீட்டு பெறுமதிக்கு இடையில் காணப்படுகின்ற வித்தியாசத்தினை 2017ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர் மாவட்ட செயலாளர்களினால் குறித்த நபர்களுக்கு பெற்றுக் கொடுத்தல் மற்றும் சீரற்ற காலநிலையினால் பயிர் செய்கை பாதிக்கப்பட் டுள்ள குருநாகல், புத்தளம், அநுராதபுரம், பொலன்னறுவை வவுனியா மாவட்டங்க ளில் விவசாய குடும்பங்களுக்கு சலுகை வழ ங்குவதை துரிதப்படுத்துதல் ஆகிய 8 விடயங்களை எவ்விதமான தாமதமுமின்றி நடைமுறைப்படுத்த வேண்டும் என குறிப்பிடப் பட்டுள்ளது.