தமிழரசுக் கட்சி உறுப்பினர் அகில இலங்கை தமிழ் காங்கிரஸுடன் இணைவு

275 0

தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பிரதான உறுப்பினர் குமாரசாமி ஆறுமுகம் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியில் சம்பிரதாயபூர்வமாக இணைந்துகொண்டு மட்டக்களப்பு மாநகரசபை தேர்தலில் போட்டியிடவுள்ளதாக குமாரசாமி ஆறுமுகம் தெரிவித்தார்.

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் மட்டக்களப்பு காரியாலயத்தில் அதன் மாவட்ட இணைப்பாளர் தர்மலிங்கம் சுரேஷ், கட்சியில் இணைந்துகொண்ட  குமாரசாமி ஆறுமுகத்தை  சம்பிரதாயபூர்வமாக வரவேற்றார்.

இது தொடர்பில், கட்சியில் இணைந்துகொண்ட  குமாரசாமி ஆறுமுகம் கருத்துத் தெரிவிக்கையில்,

சமாதான நீதிவான் ஆகிய நான், தந்தை செல்வா காலம் தொட்டு தமிழரசுக் கட்சியில் இணைந்து கட்சிக்காக உழைத்ததுடன் பலரை பாராளுமன்றம் செல்வதற்கு பக்கபலமாக இருந்து செயற்பட்டவன். இருந்தபோதும் தற்போது கட்சியில் உள்ள சிலரது செயற்பாடு காரணமாக கட்சியில் இருந்த வெளியேறியுள்ளோன்.

இந்நிலையில் அரசுக்கு அடிபணியாது தமிழ் மக்களின் அபிலாஷைகளுக்காக தொடர்ந்தும் நீதியாக செயற்பட்டுவரும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்கட்சியுடன் இணைந்து தமிழ் மக்களுக்காக செயற்படவுள்ளோன்.

அந்த வகையில் எதிர்வரும் மட்டக்களப்பு மாநகரசபை தேர்தலில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியில் போட்டியிடுகின்றேன் என அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a comment