உள்ளூராட்சி தேர்தல் : வேட்புமனுக்களை ஏற்கும் கால அவகாசம் இன்றுடன் நிறைவு

276 0

உள்ளுராட்சி தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வேட்புமனுக்களை ஏற்பதற்குரிய கால அவகாசம் இன்று நண்பகல் 12 மணியுடன் நிறைவுபெறுகின்றது.

இன்று வியாழக்கிழமை நண்பகல் 12 மணிக்கு வேட்புமனுக்களை ஏற்கும் நடவடிக்கைகள் பூர்த்தியானதும், பிற்பகல் 1.30 வரை ஆட்சேபனைகளை தெரிவிக்க முடியுமெனவும் இறுதி வரை காத்திராது, நேர காலத்துடன் வேட்புமனுக்களை தாக்கல் செய்யுமாறும் , இதன் மூலம் தவறுகளையும், நிராகரிப்புக்களையும் தவிர்க்க முடியும் என்று தேர்தல் ஆணையாளர் நாயகம் ஆர்.எம்.ஏ.எல்.ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, உள்ளூராட்சி தேர்தலுக்கான வேட்புமனுக்கள் இரண்டு கட்டங்களாக ஏற்கப்பட்டன. முதல் கட்டத்தில் 93 உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தலுக்காகவும், இரண்டாவது கட்டத்தில் 248 மன்றங்களுக்கான தேர்தலுக்காகவும் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன.

இதற்கமைவாக 341 உள்ளுராட்சி மன்றங்களுக்கான வேட்புமனுக்களை தாக்கல் செய்யும் பணிகள் யாவும் இன்றுடன் நிறைவடைகின்றது.

அதேவேளை, தபால் மூல வாக்குப் பதிவுக்கான விண்ணப்பங்கள் நாளை வெள்ளிக்கிழமை வரை ஏற்கப்படும் என்று சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment