முன்னாள் ஜனாதிபதி இன்னும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர் எனவும், தேர்தலில் போட்டியிடும் கட்சி உறுப்பினர்கள் மஹிந்த ராஜபக்ஷவின் புகைப்படத்தை தமது துண்டுப் பிரசுரங்களில் வெளியிட முடியும் என மேல் மாகாண முதலமைச்சர் இசுர தேவப்பிரிய தெரிவித்துள்ளார்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் புகைப்படத்தை அபேட்சகர்கள் பிரச்சாரத்துக்கு பயன்படுத்துவது சாதாரண நடவடிக்கை எனவும், இதற்கு மேலதிகமாக மஹிந்த ராஜபக்ஷவின் புகைப்படத்தையும் பயன்படுத்த முடியும் எனவும் நேற்று (20) முதலமைச்சர் செயலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் கூறியுள்ளார்.