புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கின் நிரபராதியின் விளக்கமறியல் நீடிக்கபட்டுள்ளது.மாணவி வித்தியா கொலை வழக்கில் முதலாவது சந்தேக நபராக கைது செய்யப்பட்ட பூபாலசிங்கம் இந்திரகுமார் ஊர்காவற்துறை நீதிமன்ற வாளகத்தினுள் வைத்து ஊர்காவற்துறை பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவரின் பெயரைக் கூறி கொலை அச்சறுத்தல் விடுத்ருதிந்தார்.அது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட ஊர்காவற்துறை பொலீசார் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை இன்றைய தினம்(20) புதன்கிழமை பதில் நீதவான் இ.சபேசன் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.அதன் போது பதில் நீதவான் கட்டளைக்காக எதிர்வரும் 03 ஆம் திகதிக்கு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.அன்றைய தினம் வரையில், சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்குமாறு பதில் நீதவான் இ.சபேசன் மேலும் உத்தரவிட்டுள்ளார்