இம்முறை தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு மக்கள் தெளிவான ஆணை வழங்குவார்கள்- சிறிதரன்

8854 145

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு மக்கள் பல தடவைகள் ஆணை தந்திருப்பதாகவும், இம்முறையும் தமது ஆணைகளை மிகவும் தெளிவாக வழங்குவார்கள் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்ட பிரதேசசபைகளில் இன்றைய தினம் வேட்பு மனுக்களை தாக்கல் செய்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.மேலும் தெரிவிக்கும் போது;

தமிழ் மக்களுடைய உரிமைக்கான பயணத்திற்கு மக்கள் தங்களது ஆணைகளை மிகவும் தெளிவாக வழங்குவார்கள்.வடக்கு, கிழக்கு இணைந்த சமஸ்டி அடிப்படையிலான தாயக மண்ணில் சுயாட்சியைப் பெற்றுக் கொள்வதற்கான ஒரு தீர்வின் அடிப்படையில், அதனை ஒரு பிரதான இலக்காக வைத்துக்கொண்டு ஒவ்வொரு பிரதேசங்களிலும் மக்கள் பிரதிநிதிகளை தெரிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

Leave a comment