உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் யாழ் மாவட்டத்தில் போட்டியிடும் 7 சபைகளுக்கான வேட்பு மனுக்களை இன்று (20) தாக்கல் செய்தனர்.
அகில இலங்கை தமிழ்க் காங்கிரசின் சைக்கிள் சின்னத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் போட்டியிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
வலிகாமம் மேற்குப் பிரதேச சபை, வலிகாமம் தெற்குப் பிரதேச சபை, சாவகச்சேரி பிரதேச சபை, வடமராட்சி தென்மேற்குப் பிரதேச சபை, பருத்தித்துறைப் பிரதேச சபை, ஆகிய சபைகளுக்கு தாக்கல் செய்தனர்.
அத்துடன் பருத்தித்துறை நகரசபை, வல்வெட்டித்துறை நகரசபை ஆகிய சபைகளுக்கு யாழ் மாவட்டச் செயலகத்திலுள்ள தேர்தல்கள் அலுவலகத்தில் கட்சியின் தேசிய அமைப்பாளர் வி.மணிவண்ணன் வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.