அழுகிய நிலையில் ஆணொருவரின் சடலமொன்று மீட்கப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனா்.
அம்பாறை, பொத்துவில் மண்மலையை அண்டிய ஜலால்தீன் சதுக்க கடற்கரைப் பிரதேசத்தில் குறித்த ஆணின் சடலம் நேற்று (19) மீட்கப்பட்டதாக பொத்துவில் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
பொத்துவில் P/03 கிராமசேவகர் பிரிவு மண்மலையை அண்டியிருக்கும் கடற்கரைப் பகுதியில் வளர்ப்பு மரங்கள் நிறைந்த பற்றைக்காட்டிற்குள் துர்வாடை வீசியதையடுத்து பொதுமக்கள் வழங்கிய தகவலுக்கமைவாகவே பொலிசார் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனா்.
அங்கு ஆணொருவரின் சடலம் அழுகிய நிலையில் காணப்பட்ட நிலையில் நேற்று(19) பகல் சடலத்தை பொலிசார் மீட்டனா்.
இந்த சம்பவத்தில் இறந்த ஆண் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு முன்னர் உயிரிழந்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து மேலதிக விசாரணைகளை பொத்துவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.