விமான எரிபொருள் தொடர்பில் பொய்யான பிரச்சாரம்: ஏமாற வேண்டாம் என கோரிக்கை

280 0

விமானங்களுக்கான எரிபொருள் தொடர்பில் பல்வேறு நபர்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் பொய்ப் பிரச்சாரங்களைக் கேட்டு ஏமாற வேண்டாம் என, பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சு கோரியுள்ளது.

நாட்டினுள் நிலையற்ற தன்மையை ஏற்படுத்த முற்படும் சில தரப்பினரால், இதுபோன்ற தவறான பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக, அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், உயர் தரத்திலான எரிபொருளை பெற்றுக் கொடுக்க தமது அமைச்சு தொடர்ந்தும் முன்நிற்கும் எனவும், பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

லங்கா ஐ.ஓ.சி நிறுவனத்தின் ஊடாக நாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ள விமானத்திற்கான எரிபொருள் தரமற்றது என, அண்மையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்ட, பெற்றோலிய வள தொழிற்சங்கங்கள் குறிப்பிட்டன.

இந்த விடயம் குறித்து விளக்கமளிக்கையிலேயே பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சு மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளது.

Leave a comment