இலங்கைக்கு மூன்று நாள் உத்தியோக பூர்வ விஜயத்தினை மேற்கொண்ட மலேசிய பிரதமர் நஜீப் பின் துன் அப்துல் ரஸாக்கின் முக்கிய நிகழ்வுகளை உள்ளடக்கிய புகைப்படத்தொகுப்பு (Album) மற்றும் இருவெட்டு கையளிக்கப்பட்டது.
இது தொடர்பான நிகழ்வு கொழும்பு சங்கரி-லா ஹோட்டல் வளாகத்தில் இடம்பெற்றது.
அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சட்டத்தரணி சுதர்ஷன குணவர்தன, பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் காணி அமைச்சர் கயந்த கருணாதிலக ஆகியோரினால் மலேசிய பிரதமரிடம் இந்த ஆவணங்கள் கையளிக்கப்பட்டன.
இந்த ஆவணங்கள் அரசாங்க தகவல் திணைக்களத்தின் புகைப்படப்பிரிவு மற்றும் இருவெட்டு பிரிவினால் தயாரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.