மேல் நீதிமன்றத்தில் நாள்தோறும் வழக்குகளை விசாரிப்பதனை கட்டாயப்படுத்த நடவடிக்கை

270 0

விசேட சந்தர்ப்பங்களில் மற்றும் குறிப்பிடுவதற்கு உகந்த சாதாரண காரணங்கள் கொண்ட சந்தர்ப்பங்களை தவிர்ந்த ஏனைய சந்தர்ப்பங்களில் மேல் நீதிமன்றத்தில் நாள்தோறும் வழக்குகளை நடாத்துவதை கட்டாயப்படுத்தும் வகையில் உறுப்புரைகளை உள்ளடக்கி 1979ம் ஆண்டின் 15ம் இலக்க சட்டத்தினை திருத்தம் செய்வது தொடர்பில் நீதி அமைச்சர் தலதா அதுகோரலவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

மேல் நீதிமன்றத்தில் நாள்தோறும் வழக்குகள் விசாரிக்கப்படாமையினால் வழக்கு விசாரிப்பதில் தாமதம் ஏற்படுவதை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Leave a comment