கிராம உத்தியோகத்தர்களுக்கு பிணை வழங்க மறுப்பு

268 0

கல்கமுவ பகுதியில் தலப்பூட்டுவா  யானையைக் கொன்ற சந்தேகத்தில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கிராம உத்தியோகத்தர்கள் இருவரினதும் பிணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

மஹவ மாவட்ட நீதிபதி ரசிக மல்லவாராச்சி இன்று (20) இந்த பிணை மனுவை நிராகரித்துள்ளார்.

அதற்கயைம குறித்த இரண்டு சந்தேகநபர்களையும் எதிர்வரும் 3ஆம் திகதி வரை விளக்கமறிலில் வைக்குமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணை அறிக்கைகளை அன்றைய தினம் நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறும் இரகசியப் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

Leave a comment