போலி ஆவணங்களைத் தயாரித்து 30 இலட்சம் பெறுமதியான காரை விற்று மோசடியில் ஈடுபட்ட சந்தேகநபரைக் கைதுசெய்வதற்கு பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
34 வயதான குறித்த நபர் நிட்டம்புவ பகுதியை வசிப்பிடமாகக் கொண்டவர் என்றும், இவருக்கு எதிராக கம்பஹா நீதவான் நீதிமன்றில் வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவர் தொடர்பாக தகவல் தெரிந்தவர்கள் 077-3890959 அல்லது 033- 2235331 என்ற அலைபேசி இலக்கத்திற்கு அழைத்து தகவல் வழங்குமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.