எதிர்வரும் தேர்தலில் புதிய சின்னத்தில் போட்டியிடப்போவதாக பசில் ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.
வழக்கு விசாரணைகளுக்காக நேற்றைய தினம் உயர் நீதிமன்றத்திற்குச் சென்று திரும்புகையிலேயே செய்தியாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கும்போது மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில், நிச்சயமாக நான் புதிய சின்னத்தில் கூட்டணிக் கட்சி அமைத்துப் போட்டியிடப்போகின்றேன் எனத் தெரிவித்தார்.
மேலும், சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுக்கூட்டத்தில் தான் ஒருபோதும் பங்குபற்றப்போவதில்லையெனவும் அறிவித்துள்ளார்.
சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்தியகுழுக் கூட்டம் தற்போது நடைபெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.