கொழும்பு மாநகர சபையில் ” ஒருங்கிணைந்த முற்போக்கு கூட்டணியாக” களமிறங்குகின்றது தமிழர் முற்போக்குக் கூட்டணி. ஐக்கிய தேசியக் கட்சியுடன் முரண்பாடுகள் இல்லை, எனினும் கட்சிக்குள் உள்ள ஒரு சிலருடனே முரண்பாடுகள். தனித்து களமிறங்க இதுவே காரணம் என்கிறார் அமைச்சர் மனோ கணேசன். அரசாங்கத்தின் பங்காளிகள் என்பதற்காக சலுகைகளை பெற்று வாயை மூடி இருக்க முடியாது, தமிழர்களின் உரிமை எமக்கு முக்கியம் எனவும் அவர் தெரிவித்தார்.
தமிழர் முற்போக்கு கூட்டணியின் செய்தியாளர் சந்திப்பு கொழும்பில் மகாவலி கேந்திர மையத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மனோ கணேசன் இதனை தெரிவித்தார்.