எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக யாழ் மாவட்ட ஒட்டுமொத்த சபைகளுக்குமான கட்டுப்பணத்தினை சிறிலங்கா சுதந்திரக் கட்சி இன்று (20) செலுத்தியுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன் தலைமையில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.
இன்று (20) காலை 10 மணிக்கு யாழ் மாவட்ட தேர்தல்கள் அலுவலகத்தில் பணத்தைக் கட்டியுள்ளனர்.