அரச நிறுவனங்களில் ஜனவரி 1ம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படவிருந்த அஸ்பெஸ்டோஸ் கூரை தகடுகளுக்கான தடையை நீக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
குறித்த வகை கூரை தகடுகளின்பாதிப்பு குறைவாக இருப்பதாக சுகாதார பிரிவினரால் கண்டறியப்பட்டதை அடுத்தே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எனினும் நீல நிற அஸ்பெஸ்டோஸ் கூரை தகடுகளுக்கான தடையை தொடர்ந்தும் அமுல்படுத்துவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்திலேயே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அஸ்பெஸ்டோஸ் கூரை தகடுகளினால் புற்று நோய் உண்டாவதாக கூறி 2018 ஜனவரி 1ம் திகதி முதல் குறித்த கூரைத் தகடுகள் தடை செய்யப்படும் என 2015ம் ஆண்டு அரசு அறிவித்திருந்தமை குறிப்பிடத்த்தக்கது.