பெருந்தொகை போதை மாத்திரைகளுடன் அம்பாறையில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
காரொன்றில் 23,400 போதை மாத்திரைகளுடன் பயணித்த போதே, இவர் இவ்வாறு கைதாகியுள்ளதாக, பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சந்தேகநபர் அக்கரைப்பற்று பகுதியைச் சேர்ந்த 65 வயதான ஒருவராகும்.
இவரை அம்பாறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.