இலங்கை தேயிலையை இறக்குமதி செய்வதற்கு ரஷ்யா விதித்துள்ள தடையை நீக்குமாறு, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினிடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கேட்டுக்கொண்டுள்ளார்.
இது தொடர்பாக ஜனாதிபதி, ரஷ்ய ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளதாக வெளிநாட்டு இணையதளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கை தேயிலை தொடர்பில் ரஷ்யா விடுத்துள்ள இடைக்கால தடை நேற்று முதல் அமுலுக்கு வந்துள்ளது.
அண்மையில் இறக்குமதி செய்யப்பட்ட இலங்கைத் தேயிலையில் வண்டுகள் இருப்பதாக தெரிவித்து, இலங்கையிலிருந்து தேயிலை உள்ளிட்ட விவசாய உற்பத்தி பொருட்களுக்கு ரஷ்யா இடைக்கால தடை விதித்தது.
அந்த இடைக்கால தடையினை நீக்குமாறு ரஷ்ய ஜனாதிபதியிடம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரிக்கை ஏற்கனவே கோரிக்கை விடுத்திருந்த நிலையில் கடிதம் மூலமும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இலங்கையின் தேயிலையை இறக்குமதி செய்வதற்கு ரஷ்யா விடுத்துள்ள தற்காலிகத் தடையை விரைவில் நீக்கிக் கொள்ள முடியும் என்று ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவர் சமன் வீரசிங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.