கட்டுப் பணம் செலுத்தும் நடவடிக்கைகள் நண்பகலுடன் நிறைவு

244 0

248 உள்ளுராட்சி மன்றங்களுக்கான கட்டுப் பணம் செலுத்தும் நடவடிக்கைகள் இன்று பகல் 12.00 மணியுடன் நிறைவடையவுள்ளன. 

இதற்கமைய, வேட்பு மனுக்களை ஏற்கும் நடவடிக்கைகளும் நாளை நண்பகலுடன் நிறைவடையவுள்ளது.

அதன் பின்னர் ஒன்றறை மணித்தியாலங்கள் ஆட்சேபனை தெரிவிக்க சந்தர்ப்பம் அளிக்கப்படவுள்ளதோடு, பிற்பகல் 01.30க்கு தெரிவத்தாட்சி அதிகாரிகளால் வேட்புமனு தொடர்பான தீர்மானம் எடுக்கப்படும் என, தேர்தல்கள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

இம்முறை பெப்ரவரி 10ம் திகதி உள்ளூராட்சி மன்றத் தேர்தல் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment