சர்வதேச அறிவியல் போட்டி: துபாயில் வசிக்கும் சென்னை மாணவருக்கு வெண்கலப் பதக்கம்

254 0

நெதர்லாந்தில் நடந்த சர்வதேச அறிவியல் போட்டியில் பங்கேற்ற துபாயில் வசிக்கும் சென்னை மாணவர் வெண்கலப்பதக்கம் பெற்று சாதனை படைத்துள்ளார்.

உலக முழுவதிலும் உள்ள பள்ளிக்கூட மாணவர்களின் அறிவியல் படைப்புகள் மற்றும் கண்டுபிடிப்புகளை வெளிக்கொண்டு வரும் வகையில் சர்வதேச ‘ஒலிம்பியாட்’ எனப்படும் அறிவியல் போட்டி நெதர்லாந்து நாட்டில் நடந்தது.
இந்த போட்டியின் போது ‘தண்ணீர் மற்றும் தக்கவைத்தல்’ என்ற தலைப்பில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அறிவியல் பூர்வமாக பதிலளிக்கும் கட்டுரை போட்டி நடைபெற்றது. இதில் 54 நாடுகளை சேர்ந்த 15 வயதுக்கு உட்பட்ட பள்ளிக்கூட மாணவ, மாணவிகள் பங்கு பெற்றனர்.
இதில் துபாயில் வசிக்கும் தமிழ்நாட்டை சேர்ந்த கவுசிக் முருகன் (வயது 15) என்ற மாணவர் கலந்து கொண்டு வெண்கலப் பதக்கம் பெற்றார். மாணவர் கவுசிக் முருகன் துபாயில் உள்ள டெல்லி தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். கவுசிக் முருகனின் தந்தை சண்முக முருகன். தாயார் பெயர் ஷர்மினா. ஹஷ்மிதா என்ற 4-ம் வகுப்பு படிக்கும் சகோதரியும் உள்ளார். தமிழகத்தில் சென்னையை பூர்வீகமாக கொண்ட இவர்கள் துபாயில் கடந்த 22 ஆண்டுகளாக வசித்து வருகின்றனர்.
சாதனை மாணவர் கவுசிக் முருகன் கூறுகையில், “ எதிர் காலத்தில் சிறந்த பொறியியல் தொழில்நுட்பத்தில் தேர்ச்சி பெற வேண்டும் என்பதே என் நோக்கம்” என்றார்.

Leave a comment