ஈபிடிபி உறுப்பினர்களை ஈபிடிபி உறுப்பினர் ராமமூர்த்தியே வெட்டிக்கொன்றார்

318 0

epdpஊர்காவற்றுறை சுருவிலில், ஈபிடிபியில் இருந்து தப்பிச் சென்று விடுதலைப்புலிகளுடன் இணைய முயன்ற 6 உறுப்பினர்கள் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். அவர்களை வெட்டிக் கொலை செய்தவர் ஈபிடிபியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராமமூர்த்தியே. அவர்களை வெட்டிக் கொன்ற இரத்தம் தோய்ந்த கத்தியுடன் தான் அவர் எமக்கு கூட்டம் நடத்தினார்.

முன்னைய அரசாங்கத்துடன் முரண்பட்டுக் கொண்டு, இந்தியாவில் தங்கியிருந்த வானொலி அறிவிப்பாளர் கே.எஸ்.ராஜாவை கொழும்புக்கு அழைத்து வந்திருந்தார் டக்ளஸ்  தவானந்தா. பின்னர் அவர் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் மீண்டும் இணைந்துகொள்ளத் திட்டமிட்ட தகவல் வெளியானதும், தமது இரகசியங்கள் வெளியே சென்று விடும் என்ற அச்சத்தில் ஈபிடிபியினரால் மதுவில் நஞ்சு கலந்து கொலை செய்யப்பட்டார்.

கொழும்பில் விஜி, யாழ்ப்பாணத்தி்ல் பாண்டியன், ஊர்காவற்றுறையில் கிளி, போன்ற ஈபிடிபி உறுப்பினர்களையும் ஈபிடிபி உறுப்பினர்களே கொலை செய்தனர். நாரந்தனையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு மனோ எனப்படும் மதனராஜன் என்ற ஈபிடிபியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரே உத்தரவிட்டிருந்தார்.

புதிய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர், ஈபிடிபியினரின் கொலைகள் மற்றும் குற்றச்செயல்கள் குறித்து கொழும்பு, மற்றும் யாழ். காவல்நிலையங்களில் முறைப்பாடு செய்த போதிலும், உரியவகையில் அவை ஏற்றுக் கொள்ளப்படவில்லை.

ஈபிடிபியில் இருந்த போது, பாதுகாப்பு அமைச்சினால் வழங்கப்பட்ட சம்பளத்தையும் கூட, ஈபிடிபியினரே பறித்துக் கொண்டு சிறிய தொகையையே வழங்கினர்.” என்றும் அவர் தெரிவித்தார்.