வவுனியா, தோணிக்கல் ஆலடிப்பகுதியிலுள்ள வியாபார நிலையமொன்றை உடைத்து அங்கிருந்து பணம், பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
நாம் நேற்று இரவு 9.20 மணியளவில் வியாபார நிலையத்தினை மூடிவிட்டுச் சென்றோம். இன்று காலை 7 மணியளவில் கடையைத்திறப்பதற்குச் சென்றபோது கடை உடைக்கப்பட்டு திருட்டு போயுள்ளமை தெரியவந்துள்ளது.
இதையடுத்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளோம் என்று வியாபார நிலைய உரிமையாளர் தெரிவித்தார்.
வவுனியாவில் நேற்று மழையுடனான கால நிலையைப் பயன்படுத்தி திருடர்கள் கடையை உடைத்து பணம், பொருட்கள் என்பனவற்றை திருடிச் சென்றுள்ளதாகவும் கடையில் நேற்று இடம்பெற்ற வியாபாரத்தால் கிடைத்த பணமும் அங்கர் போன்ற பால்மா பொருட்களையுமே திருடர்கள் திருடிச் சென்றுள்ளதாக வியாபார நிலைய உரிமையாளர் மேலும் தெரிவித்தார்.
இந்நிலையில், முறைப்பாட்டையடுத்து பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய எவரும் இதுவரை கைதுசெய்யப்படவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.