சிறுத்தையின் உடலுறுப்புக்களை விற்பனைக்காக வைத்திருந்த குடாகம பிரதேசத்தை சேர்ந்த ஒருவரை ஹட்டன் பொலிஸார் நேற்று இரவு கைது செய்துள்ளனர்.
ஹட்டன் பொலிஸ் பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய குறித்த நபரின் வீட்டை சுற்றிவளைத்த பொலிஸ் குழுவினரால் சிறுத்தையின் பல், நகம், தோல் என்பன மீட்கப்பட்டுள்ளது
குடாகம காட்டுப்பகுதியிலே சிறுத்தையை கொன்று இவ்வாறு உறுப்புக்களை விற்றபனைக்காக. வைத்திருந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிப்பதுடன்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரை இன்று ஹட்டன் மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.