ஜெயலலிதா சிகிச்சை பெற்ற வீடியோ வௌியானது!

303 0

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது எடுக்கப்பட்ட வீடியோவை டிடிவி தினகரன் ஆதரவாளர் எம்.எல்.ஏ., வெற்றிவேல் வெளியிட்டார். 

வீடியோவை வெளியிட்ட வெற்றிவேலிடம் செய்தியாளர்கள் சரமாரியாக கேள்வி எழுப்பினர்.

அப்போது அவர், “ஜெயலலிதா மரணத்தைக் குறித்து பல்வேறு சந்தேகங்களை தொடர்ந்து எழுப்பி வருகின்றனர்.

அவர் உயிருடன் இருந்த போது முன்னால் நிற்கவே பயந்தவர்கள் இப்போது பல்வேறு கேள்விகளை எழுப்புகின்றனர். ஜெயலலிதாவுக்கு இரண்டு குழந்தைகள் இருப்பதாகக் கூறி அவதூறு பரப்பிவருகின்றனர்.

அம்மா இப்படி ஒரு சூழலில் இருந்தபோது எடுத்த வீடியோவை வெளியிட எங்களுக்கு விருப்பமில்லைதான். ஆனால், தொடர்ந்து பரப்பப்படும் அவதூறுகளை எங்களால் பொறுக்க முடியாமல்தான் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளோம். இந்த வீடியோவை இப்போது வெளியிட தேர்தல் அரசியல் காரணம் அல்ல. விசாரணை ஆணையம் எங்களை விசாரணைக்கு அழைத்தால் ஒத்துழைப்பு தருவோம் என ஏற்கனவே கூறியிருந்தோம். எங்களை அழைக்கவில்லை அதனால் நாங்கள் அங்கே எதையும் ஒப்படைக்க வாய்ப்பில்லை.

ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் இருந்தபோது நான் ஒருநாள்கூட உள்ளே சென்றதில்லை. ஆனால், எடப்பாடி பழனிசாமி, உதயகுமார், ஜெயகுமார், ஓபிஎஸ், விஜயபாஸ்கர் ஆகியோர் உள்ளே சென்றனர்.

அவர்கள் நடத்திய ஆலோசனை வீடியோகூட இருக்கிறது. இன்னும் பல வீடியோக்கள் உள்ளன, தேவைப்பட்டால் வெளியிடுவோம்” என்றார்.

Leave a comment