தேயிலை தடையை நீக்க, அஸ்பெட்டஸ் கூரை தகடுகளுக்கு அனுமதி !

261 0

ரஷ்யாவில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் அஸ்பெட்டஸ் கூரை தகடுகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை தற்காலிகமாக நீக்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போதே இந்த அனுமதி வழங்கப்பட்டது.

குறித்த அமைச்சரவை கூட்டத்தின் போது இலங்கை தேயிலைக்கு ரஷ்யாவில் விதிக்கப்பட்டுள்ள தற்காலிக தடை தொடர்பில் அதிகளவில் கலந்துரையாடப்பட்டதாகவும், ரஷ்யாவில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் அஸ்பெட்டஸ் கூரை தகடுகளுக்கு இலங்கையில் விதிக்கப்பட்டுள்ள தடையை தளத்தினால், அதன் விளைவாக தேயிலை தடை நீங்குவதற்கான வாய்ப்பு உள்ளதாகவும் அமைச்சர்கள் பலர் கருத்துத் தெரிவித்துள்ளனர். இதற்கமையவே குறித்த தடை தற்காலிமாக தளர்த்தப்பட்டுள்ளது.

Leave a comment