உள்ளூராட்சி மன்றத் தேர்தல் – கட்டுப் பணம் செலுத்தும் நடவடிக்கைகள் இன்று நண்பகலுடன் நிறைவு

398 0

248 உள்ளுராட்சி மன்றங்களுக்கான கட்டுப் பணம் செலுத்தும் நடவடிக்கைகள் இன்று நன்பகல் 12 மணியுடன் நிறைவடையவுள்ளன.

மேலும் குறித்த உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்பு மனுக்களை ஏற்கும் நடவடிக்கைகள் நாளை நண்பகலுடன் நிறைவடையவுள்ளது.

வேட்புமனுத் தாக்கலின் பின்னர் ஆட்சேபனை தெரிவிப்புக்காக ஒன்றறை மணித்தியாலங்கள் வழங்கப்படவுள்ளதாகவும் பிற்பகல் 01.30 க்கு தெரிவத்தாட்சி அதிகாரிகளால் வேட்புமனு தொடர்பான தீர்மானம் எடுக்கப்படும் எனவும் தேர்தல்கள் ஆணையகம் தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் எதிர்வரும் பெப்ரவரி 10ம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment