பாடசாலைகளுக்கு புத்தகம் விநியோகிப்பதில் தாமதம் – ஆசிரியர் சங்கம்

463 0

அடுத்த வருடத்திற்கான பாடசாலைகளுக்கு புதிய புத்தகங்களை விநியோகிப்பதில் சிக்கல் உருவாகியிருப்பதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோஸப் ஸ்டாலின் குற்றம் சுமத்தியுள்ளார்.

அடுத்த ஆண்டு, 50 சதவீதமான புதிய புத்தகங்களே வழங்கப்படும் என்றும், 50 சதவீதம் இந்த வருடம் வழங்கப்பட்ட புத்தகத்தை மீள பயன்படுத்துமாறும் கல்வி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

ஆனால், அனைத்து பாடசாலைகளிலும் இது சாத்தியமில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில், கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவிக்கையில்,

50 சதவீதம் பழைய புத்தகங்களை பயன்படுத்துமாறும் அறிவுறுத்தவில்லை என்றும், பெரும்பாலான புதிய புத்தகங்கள் பாடசாலைகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார், ஆனால் சில புத்தகங்களை அச்சிடுவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக, இன்னும் அவை விநியோகிக்கப்படவில்லை.

விரைவில் இந்த நிலைமை சீரமைக்கப்படும் என கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்

Leave a comment