உலக தமிழர் பண்பாட்டு இயக்கத்தின் கலை,கலாச்சார, பண்பாட்டு விழா எதிர்வரும் தை மாதம் 27ம் திகதி யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
யாழ்.ஊடக அமையத்தில் நடைபெறவுள்ள பத்திரிகையாளர் சந்திப்பில் அதன் அகிலத்தலைவர் வேல் வேலுப்பிள்ளை இதனை அறிவித்தார்.
இவ்விழாவில் பங்கெடுக்க இந்தியா,மலேசியா மற்றும் ஜரோப்பிய நாடகளினிலிருந்து நூற்றுக்கணக்கான தமிழ் ஆர்வலர்கள் வருகை தரவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
ஓப்பீட்டளவில் இலங்கையில் தமிழ் மொழி சிறப்பாக பேணப்படுவதாக தெரிவித்த அவர் ஆனால் புலம்பெயர் தேசத்தில்,ஆபிரிக்கா உள்ளிட்ட நாடுகளில் தமிழ் மொழியை மேலும் மேம்படுத்தவேண்டிய தேவை இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இம்முறை எமது பாரமபரியத்தை பேணும்வகையில் மூத்த கலைஞர்கள் மற்றும் தமிழ் அறிஞர்களை கௌரவிக்கவுள்ளதாகவும் தெரிவித்த அவர் இதற்கேதுவாக துறைசார்ந்தவர்களிடமிருந்து விண்ணப்பங்களை பெறவிருப்பதாகவும் தெரிவித்தனர்.
இதனிடையே அண்மையில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற பண்பாட்டு இயக்க நிகழ்வுகள் தமது அமைப்பின் ஜெர்மன் மற்றும் கனடா கிளைகளால் முன்னெடுக்கப்பட்டிருந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.