ரியாத் அரண்மனை மீது ஏமன் போராளிகள் ஏவுகணை தாக்குதல் – வீழ்த்தியதாக சவுதி தகவல்

419 0

சவுதி அரேபியா தலைநகர் ரியாத் நகரில் உள்ள அரண்மனையின் மீது ஏமன் போராளிகள் ஏவுகணை தாக்குதல் நடத்தியதாகவும், அதை சுட்டு வீழ்த்தியதாகவும் சவுதி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஏமன் நாட்டின் அரசுக்கு எதிராக ஈரானின் ஆதரவுடன் உள்நாட்டு ஹவுத்தி புரட்சிப் படையினர் கடந்த இரண்டாண்டுகளாக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அரசுப் படைகளுடன் புரட்சிப் படையினர் நடத்திவரும் மோதலில் பத்தாயிரத்துக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்த படையினருக்கு சவுதி அரேபியா தலைமையிலான இஸ்லாமியப் படைகள் ஆதரவு அளித்து வருகின்றன. இந்த ஆதரவுடன் நாட்டின் தலைநகரான சனாபகுதியை கைப்பற்றியுள்ள புரட்சிப் படையினர் அந்நகரை தங்களது ஆளுமைக்கு உட்படுத்தி வைத்துள்ளனர்.

கடந்த மூன்றாண்டுகளாக அரசுப் படைகளுடன் ஹவுத்தி புரட்சிப் படையினர் நடத்திவரும் மோதலில் பத்தாயிரத்துக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். அரசுப் படையினருக்கு சவுதி அரேபியா தலைமையிலான இஸ்லாமியப் படைகள் ஆதரவு அளித்து வருகின்றன.

ஹவுத்தி புரட்சிப் படையினரை விமான தாக்குதல் மூலமாக வேட்டையாடும் பணியில் சவுதி தலைமையிலான ஐக்கிய அரபு அமீரக கூட்டுப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 2015-ம் ஆண்டில் தொடங்கிய இந்த உள்நாட்டுப் போரில் 8,670-க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். சுமார் பத்தாயிரம் பேர் காயம் அடைந்துள்ளனர்.

இதற்கு பழிவாங்கும் வகையில் அவ்வப்போது சவுதி அரேபியா மீது ஏமன் போராளிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். அவ்வகையில், சவுதி அரேபியா தலைநகர் ரியாத் நகரில் உள்ள ரண்மனையின் மீது ஏமன் போராளிகள் இன்று ஏவுகணை தாக்குதல் நடத்தியதாகவும், அதை சுட்டு வீழ்த்தியதாகவும் சவுதி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Leave a comment