2020 ஆம் ஆண்டில் ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க செயற்படுவார் என சர்வதேச வர்த்தக இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தற்போது நாமல் ராஜபக்ஷவை எதிர்க்கட்சி தலைவராக்குவதே மஹிந்த ராஜபக்சவின் பிரதான நோக்கமாகவுள்ளது.
மஹிந்த ராஜபக்ஷ தற்போது இதற்கான திட்டங்களை அமைத்து வருகின்றார். இதற்காகவே, கோத்தபாய, பசில், சமலை புறக்கணித்து வருகிறார். இதனால் குடும்பத்திற்குள்ளேயே போட்டியை ஆரம்பித்துள்ளார்.
மேலும், இலங்கையின் தற்போதைய அபிவிருத்தி நூற்றுக்கு 4.2 வீதமாக காணப்படுகின்றது.
2020ஆம் ஆண்டாகும் போது அது நூற்றுக்கு 7 வீதத்தை கடக்கும். எதிர்காலத்தில் இந்தியாவை விட அதிக அபிவிருத்தி வேகத்தை நோக்கி நாம் செல்வோம். அதனை செய்து முடிக்கும் போது 2020ஆம் ஆண்டு ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க செயற்படுவார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.