முல்லைத்தீவில் இராணுவத்தின் வசமுள்ள காணிகளை விடுவிக்க நடவடிக்கை

351 0

முல்லைத்தீவு மாவட்டத்தில் பாதுகாப்பு பிரிவினருக்குத் தேவையான அரச காணிகளை பெற்றுக் கொண்டதன் பின்னர், இராணுவத்தினரின் வசமுள்ள பொது மக்களின் காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக, அம் மாவட்ட அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். 

இது குறித்த வேலைத் திட்டங்கள் தற்போது நடைபெற்று வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, முல்லைத்தீவு மாவட்டத்தில் 158 ஏக்கர் நிலப்பரப்பில் மிதிவெடிகள் அகற்றப்பட்டு, அவை தன்னிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றை, எதிர்வரும் 28ம் திகதி மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அரச அதிபர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், முல்லைத்தீவில் மீள்குடியேற்றத்திற்காக, 168 குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாவும் அவர் தெரிவித்துள்ளார்.

இவர்களுக்கு இந்திய வீட்டுத் திட்டத்தின் ஊடாக 12 இலட்சம் ரூபா பெறுமதியான நிரந்தர வீடுகள் அமைத்துக் கொடுக்கப்படவுள்ளதாகவும் ரூபவதி கேரீஸ்வரன் மேலும் கூறியுள்ளார்.

Leave a comment