ஆர்.கே.நகரில் இதுவரை ரூ.30 லட்சம் பறிமுதல்: மாவட்ட தேர்தல் அதிகாரி தகவல்

6982 0

ஆர்.கே.நகரில் இதுவரை ரூ.30 லட்சத்து 29 ஆயிரத்து 100 பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாக மாவட்ட தேர்தல் அதிகாரி அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடாவை தடுக்க தேர்தல் ஆணையம் தீவிர நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. தேர்தல் கண்காணிப்பு பணிக்காக இதுவரை 9 தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தேர்தல் அறிவிப்பு வந்ததும், தேர்தல் நடத்தை விதிமுறைகளும் அமலுக்கு வந்துவிடும். அந்த வகையில், தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி உரிய ஆவணங்கள் இன்றி அதிகளவில் பணம் எடுத்து சென்றால் அது தேர்தல் ஆணையத்தால் பறிமுதல் செய்யப்படும். அதன்படி, ரூ.30 லட்சத்து 29 ஆயிரத்து 100 பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாக மாவட்ட தேர்தல் அதிகாரி அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அந்த செய்திக்குறிப்பில், ‘17.12.2017 காலை 7 மணி வரை உள்ள தகவல் படி ஆர்.கே.நகரில் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்ல முயன்ற ரூ.30 லட்சத்து 29 ஆயிரத்து 100 பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாகவும், 95 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும்’ குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

Leave a comment