சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் முகாம்கள் மீது அமெரிக்க போர் விமானங்கள் குண்டுமழை பொழிந்து நடத்திய ஆவேச தாக்குதலில் வெளிநாடுகளில் நடைபெறும் தீவிரவாத தாக்குதல்களுக்கு திட்டம் வகுத்து தந்துவந்த ஐ.எஸ். தீவிரவாதி இயக்கத்தின் முக்கிய தளபதி அப் முஹம்மத் அல் அட்னானி கொல்லப்பட்டார்.
சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் முகாம்கள் மீது அமெரிக்க போர் விமானங்கள் குண்டுமழை பொழிந்து நடத்திய ஆவேச தாக்குதலில் வெளிநாடுகளில் நடைபெறும் தீவிரவாத தாக்குதல்களுக்கு திட்டம் வகுத்து தந்துவந்த ஐ.எஸ். தீவிரவாதி இயக்கத்தின் முக்கிய தளபதி அப் முஹம்மத் அல் அட்னானி கொல்லப்பட்டான்.
சிரியாவின் அல் பாப் நகரில் உள்ள ஐ.எஸ். தீவிரவாதிகளின் முகாமை குறிவைத்து அமெரிக்க விமானப்படைகள் நடத்திய தாக்குதலில் வெளிநாடுகளில் நடைபெறும் தீவிரவாத தாக்குதல்களுக்கு திட்டம் வகுத்து தந்துவந்தவனும், ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தின் செய்தி தொடர்பாளருமான அபு முஹம்மத் அல் அட்னானி கொல்லப்பட்டதாக அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்ட்டகான் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
வெளிநாடுகளில் தனிநபர்கள் நடத்திய தீவிரவாத தாக்குதல்கள் மற்றும் தற்கொலைப்படை தாக்குதல்களுக்கு திட்டம் தீட்டி அரங்கேற்றிய அபு முஹம்மத் அல் அட்னானி, போர்க்களத்தில் இருந்து நீக்கப்பட்டதன் மூலம் ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் கடும் பின்னடைவை சந்தித்துள்ளது என பென்ட்டகான் செய்தித்துறை செயலாளர் பீட்டர் குக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த தகவலை ஐ.எஸ். தீவிரவாதிகளின் செய்தி நிறுவனமான ‘அமாக்’ உறுதிப்படுத்தியுள்ளது. அலெப்போ நகரை கைப்பற்ற முயன்றுவரும் அரசுப் படைகளுக்கு எதிரான போர் வியூகம் வகுக்க சென்றபோது நடந்த தாக்குதலில் நமது தளபதி அட்னானி வீரமரணம் அடைந்தார் என அமாக் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.