தேசிய மாநாட்டில் ஜே.வி.பி. சூளுரை

444 0

ஊழல், மோச­டிகள், குற்­றங்கள் நிறைந்த ஆட்­சியில் இருந்து நாட்­டையும் மக்­க­ளையும் மீட்­டெ­டுக்­கவே மக்கள் விடு­தலை முன்­னணி மாற்­றுப்­பா­தையில் கள­மி­றங்­கு­கின்­றது. உள்­ளூ­ராட்சி சபையின்  எமது வெற்றி 2020 ஆம் ஆண்டு ஆட்சி மாற்­றத்தை  தீர்­மா­னிக்கும் போராட்டம் வரையில் நீடிக்கும் என மக்கள் விடு­தலை முன்­ன­ணி­யினர் தமது தேசிய மாநாட்டில் சூளு­ரைத்­துள்­ளனர்.

எமக்கு அதி­கா­ரங்­களை தாருங்கள் மக்­களின் நிதியில் ஒரு ரூபாய் கூட ஊழல் இடம்பெ­றாத ஆட்­சி­யை முன்­னெ­டுத்து காட்­டு­கின்றோம் எனவும் அவர்கள் வாக்­கு­றுதி வழங்­கி­யுள்­ளனர்.

மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் உள்­ளூ­ராட்சி மன்ற வேட்­பா­ளர்கள் மாநாடு நேற்று கொழும்பு சுக­த­தாச உள்­ளக விளை­யாட்­ட­ரங் கில் இடம்­பெற்­றது. மக்கள் விடு­தலை முன் ­ன­ணியின் தலைவர் அனு­ர­கு­மார திஸா­நா­யக உள்­ளிட்ட கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்பி­னர்கள், மாகா­ண­சபை உறுப்­பி­னர்­கள், உள்­ளூ­ராட்சி மன்ற வேட்­பா­ளர்கள் மற்றும் மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் சர்­வ­தேச பிர­தி­நி­திகள் உள்­ளிட்ட பலர்  கலந்­து­கொண்­டனர்.

மாநாட்டில்  மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் தலைவர் அனு­ர­கு­மார திஸா­நா­யக உரை­யாற்­று­கையில்,

மக்கள் விடு­தலை முன்­னணி நீண்­ட­தொரு போராட்­டத்தை நடத்தி இன்று முக்­கி­ய­மான ஒரு கட்­டத்­திற்கு நாட்­டை கொண்­டு­வந்­துள்­ளது. உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்தல் நடத்­தப்ப­டாது மூன்று ஆண்­டு­களை கடந்­துள்ள நிலையில் தேர்தல் நடத்­தப்­பட வேண்டும் என்ற மிகப்­பெ­ரிய போராட்­டத்தை நாம் பாரா­ளு­மன்­றத்தின் உள்ளும், வெளி­யிலும் முன்­னெ­டுத்தோம். அவ்­வாறிருக்­கையில் இன்று அர­சாங்கம் வேறு வழி­யில்­லாது மக்­க­ளுக்கு பொறுப்புக் கூற­வேண்­டிய கட்­டா­யத்­திற்கு தள்­ளப்­பட்­டுள்­ளது. இதற்கு மக்கள் விடு­தலை முன்­ன­ணியே முக்­கிய கார­ண­மாகும். இந்தத் தேர்­தலை சாதா­ரண தேர்­த­லாக கருத வேண்டாம். உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்கு நடத்­தப்­படும் தேர்­த­லாக இருந்­தாலும் இதுவே நாட்டின் மாற்­றத்­தை உரு­வாக்கும் அடித்­த­ள­மாகும். அவ்­வாறிருக்­கையில் இந்த உள்­ளூ­ராட்சி மன்­றங்­களில் மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் பலத்­தினை உரு­வாக்க நாம் சகல முயற்­சி­க­ளையும் முன்­னெடுத்து வரு­கின்றோம். 2020 ஆம் ஆண்டு மிகப்பெ­ரிய புரட்­சி­கர மாற்­றத்தை உரு­வாக்கும் ஆண்­டாக அமையும். அதில் மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் பலம் என்­ன­வென்­பது அனை­வ­ருக்கும் தெரி­ய­வரும். எமது ஆட்­சி­யினை அமைத்து மக்­களின் சகல பிரச்­சி­னை­க­ளுக்கும் தீர்­வு­களை பெற்றுக்கொடுத்து பொரு­ளா­தார ரீதியில் நாட்­டை கட்­டி­யெ­ழுப்­பு­வதே எமது நோக்­க­மாகும்  என்றார்.

ஜே.வி.பி.யின் பொதுச்­செ­ய­லாளர் டில் வின் சில்வா உரை­யாற்­று­கையில்,

நாட்­டினை மாற்­றக்­கூ­டிய, தலை­மைத்­து­வத்தை ஏற்­று­க்கொள்ளும், ஊழ­லுக்கு எதி­ரான, மக்கள் சேவையில் ஈடு­படும் நபர்கள் அனை­வரும் எம்­முடன் இணை­யுங்கள் என்­பதை நாம் தொடர்ச்­சி­யாக கோரி வரு­கின்றோம். இம்­முறை உள்­ளூ­ராட்சி சபைத் தேர்­தலில் மக்கள் அவ்­வா­றான ஒரு மாற்­றத்தை ஏற்­ப­டுத்த வேண்டும். இந்த தேர்தல் மிகவும் முக்­கி­ய­மான தேர்­த­லாகும். இதற்கு முன்னர் தேர்தல் நடப்­ப­தையும் வாக்­க­ளிப்­ப­தையும் கூட ஆட்­சி­யா­ளர்கள் தான் தீர்­மா­னித்­தனர். எனினும் இம்­முறை அவர்­க­ளுக்கு வேட்­பு­ம­னுவைக் கூட சரி­யாக தாக்கல் செய்­து­கொள்ள முடி­யாத நிலைமை ஏற்­பட்­டுள்­ளது. இந்த நிலை­மைக்கு அவர்­களை தள்ள மக்­களே கார­ண­மாகும்.  மக்கள் இன்று சரி­யான நபர்­களை எதிர்­பார்க்­கின்­றனர். அதேபோல் மக்கள் விடு­தலை முன்­னணி மட்­டுமே நிரா­க­ரிக்­கப்­ப­டாத நபர்­களை தெரி­வு­செய்து களத்தில் இறக்­கி­யுள்­ளது.

பிர­தான இரண்டு கட்­சி­களும் தமது அழுத்­தத்தில் தேர்­தலை நடத்த முன்­வந்­துள்­ளன . மஹிந்த அணி­யினர் கூட்­ட­ணியா தனித்தா என்ற தீர்­மா­னத்தை இன்னும் எடுக்க முடி­ய­வில்லை. மூன்று கட்­சி­களும் பல்­வேறு பிரச்­சி­னை­க­ளுக்கு முகங்­கொ­டுத்து தேர்­தலில் கள­மி­றங்­கி­யுள்­ளனர். எனினும் மக்கள் விடு­தலை முன்­னணி மாத்­திரம் மக்­களின் மீதான நம்­பிக்­கையில் வெற்­றி­ பெறுவோம் என்ற நம்­பிக்­கையில் கள­மி­றங்­கி­யுள்ள கட்­சி­யாகும்.

நாம் அமைச்சு   பத­வி­களை பெற்­றுக்­கொள்ள முன்­வ­ர­வில்லை அதி­கா­ரங்­களை கைப்­பற்­றிக்­கொண்டு மக்கள் சேவைக்­கான சபை­களை மாற்­றிக்­கொள்ள வேண்டும். எமக்கு மிகவும் பெரிய பொறுப்பு உள்­ளது. மக்­க­ளுக்­காக நாம் சரி­யான திசை­யை அடை­யாளம் காட்­ட­வேண்டும்.  கடந்த காலங்­களில் இருந்து முன்­னெ­டுக்­கப்­பட்­டு­வந்த அர­சியல் செயற்­பா­டு­களில் மக்கள் சலித்­துப்­போ­யுள்­ளனர். அர­சி­யல்­வா­திகள் மீதான நம்­பிக்கை இழக்­கப்­பட்­டுள்­ளது. கடந்த 40 ஆண்­டு­களில் அர­சியல் மிகவும் கீழ்மட்ட செயற்­பா­டு­களை செய்­துள்­ளது. மக்­களை பழி­வாங்கும் அர­சி­யலே முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றது. அதேபோல் உழைக்கும்   அர­சியல்தான் இன்று இடம்­பெற்று வரு­கின்­றது. கொள்­கைகள் அனைத்தும் வெறும் காகி­தத்தில் மட்­டு­ப்ப­டுத்­தப்­பட்டு அனை­வரும் ஊழல் அர­சி­ய­லை முன்­னெ­டுத்து வருகின்­றனர்.  இவர்­களை தேர்­தலில் தோற்­க­டித்தால் மாத்­திரம் போதாது, அர­சி­யலில் இருந்தே தோற்­க­டித்து விரட்­டி­ய­டிக்க வேண்டும்.

அதற்கு மக்கள் முன்­வர வேண்டும். நாட்­டுக்­காக செயற்­படும் ஒரே கட்சி மக்கள் விடு­தலை முன்­னணி மட்­டு­மே­யாகும். நாம் மட்டுமே ஊழல் இல்­லாத அர­சி­ய­லை செய்து வரு­கின்றோம். நாம்  மக்கள் மூலம் உரு­வா­கிய கட்­சி­யாகும்.   எமக்கு சேர்த்­து­ வைக்க சொத்­துகள் இல்லை, ஆடம்­பரம் இல்லை, வெறு­மனே மக்­களின் நம்பிக்­கை­யுடன்    மக்­க­ளுக்­காக மக்கள் உரு­வாக்­கிய கட்­சியே ஜே.வி.பி.யாகும்.  ஆகவே தொடர்ந்தும் நாம் மக்­க­ளுக்­காக சேவை­யாற்­றுவோம்.

நாம் வெற்றி பெற்ற இடங்­க­ளிலும் ஏனைய கட்­சிகள் வெற்­றி­பெற்ற இடங்­க­ளிலும் உள்ள மாற்றம் என்­ன­வென்­பதை மக்கள் உணர்வார்கள்.நாம் எவ்­வாறு மக்­களை இணைத்து மாற்­றங்­களை செய்­கின்றோம் என்­பதை அவ­தா­னிக்க முடியும். சாதா­ர­ண­மாக ஒரு மே தினத்தில் கூட மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் செயற்­பா­டு­களும் ஏனைய கட்­சி­களின் செயற்­பா­டு­களும் எவ்­வாறு என்­பதை உணர்வதை போலவே இந்த தேர்­த­லிலும் அமை யும். இப்­போது உள்­ளூ­ராட்சி சபைத் தேர்­தல்­தானே என சாதா­ர­ண­மாக நினைக்க வேண்டாம். இப்போது ஏற்­படும் மாற்­றமே 2020 ஆம் ஆண்டு அர­சாங்­கத்தை மாற்றும் மிகப்­பெ­ரிய போராட்­ட­மாக அமையும். அதற்­கான அடித்­த­ளத்­தையே இப்­போது நாம் இட்டுள்ளோம். அதி­கா­ரத்தை எமக்கு தாருங்கள் உங்கள் கட்­ட­ளைக்கு அமைய அர­சி­யலில் மாற்­றத்­தை ஏற்­ப­டுத்திக் காட்­டு­கின்றோம்.

கீழ் மட்டம் முதல் மத்­திய அர­சாங்கம் வரையில் மக்­க­ளுக்கு பொறுப்பு கூறும் ஜன­நா­யக, நடு­நி­லை­வாத அர­சி­யலை செய்­து­ காட்­டு­கின்றோம். எம்­மிடம் சரி­யான திட்­டங்கள் உள்­ளன, நேர்­மை­யான அர­சியல் கொள்கை உள்­ளது, இன­வாதம், பிரி­வி­னை­வாதம் இல்­லாத செயற்­பா­டுகள் உள்­ளன. அவற்றைக் கொண்டு நாட்­டை மீட்­டுத்­த­ரு­கின்றோம்  என்றார்.

ஜே.வி.பி யின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சுனில் ஹந்­துன்­நெத்தி உரை­யாற்­று­கை   யில்,

இன்று நாடே ஸ்தம்­பிதம் அடைந்­துள்­ளது, தேர்தல் நடத்­தப்­ப­டாத கார­ணத்­தினால் உள்­ளூ­ராட்சி மன்­றங்கள் செய­லி­ழந்து காணப்­ப­டு­கின்­றன. இந்­நி­லையில் மக்­களின் மிகப்பெ­ரிய அழுத்­தங்கள் மூல­மாக அர­சாங்கம் நெருக்­க­டி­யை சந்­தித்து வரு­கின்­றது. நாமும் தொடர்ச்­சி­யாக இந்த அழுத்­தத்தை கொடுத்தோம். பாரா­ளு­மன்­றத்தின் உள்ளும் பாரா­ளு­மன்­றத்­திற்கு  வெளி­யிலும் நாம் மிகப்­பெ­ரிய போராட்­டத்தை முன்­னெ­டுத்தோம். அதன் விளை­வாக இன்று தேர்தல் ஒன்றை நடத்த  அர­சாங்கம் முன்­வந்­துள்­ளது. மேலும் இன்று பிர­தான கட்­சிகள் அனைத்­துமே ஊழல், மோச­டிகள் குற்­றங்­களில் சூழ்ந்து உள்ளன. திரு­டர்­களும்  அவர்­களை  காப்­பாற்றும் நபர்­களும் அர­சாங்­கத்தின் உள்­ளேயே இருந்து செயற்­பட்டு வரு­கின்­றனர். அவ்­வாறிருக்­கையில் மக்கள் விடு­தலை முன்­னணி மட்­டுமே நாட்டில் ஊழல் மோச­டிகள் இல்­லாத கட்­சி­யாக உள்­ளது.

எமக்கு சகல தரப்பின் ஆத­ரவும் கிடைத்­துள்­ளது. இதுவே மக்கள் எமக்கு கொடுத்த அங்­கீ­காரம், அதேபோல் ஊழல் மோச­டிகள் இல்­லாது மக்­க­ளுக்­காக குரல் கொடுப்­பதே நாம் மக்­க­ளுக்கு செய்யும் மிகப்­பெ­ரிய சேவையாகும்  என்றார்.

ஜே.வி.பி. யின் மத்­திய குழு உறுப்­பி­னர் இராம­லிங்கம் சந்­தி­ர­சே­கரன்  உரை­யாற்­று­கையில்,

இம்­முறை உள்­ளூராட்சி மன்றத் தேர்தல் மக்­க­ளுக்கு மிகவும் முக்­கி­ய­மான ஒன்­றாகும். இது­வரை நாட்டில் நில­விய  உள்­ளூராட்சி மன்ற ஆட்­சியில்   இடம்­பெற்ற ஊழல், மோச­டிகள் அனைத்­தையும் துடைத்­தெ­றியும் ஒரு முக்­கிய பொறுப்பு இன்று மக்­க­ளுக்கு வழங்­கப்­பட்­டுள்­ளது. அதற்­கான களத்­தில் இன்று நாம் மக்­க­ளுடன் கைகோர்த்து செயற்­பட்டு வரு­கின்றோம். மேலும் தேர் தல் முறை­மையில் மாற்­றங்கள் ஏற்­ப­டுத்­தவும், எல்லை நிர்­ணயம் செய்­யவும் நீண்ட காலம் கடந்த நிலையில் எமது போராட்­டத்தின் மூல­மாக இன்று ஜன­நா­யக ரீதி­யாக தேர்­தலை நடத்த முடிந்துள்ளது. அதேபோல் நாட்டின் சகல பகுதிகளிலும் நாம் களமிறங்கி மக்களின் ஆட்சிக்காக செயற்பட்டு வருகின்றோம். நாட்டில் அனைத்து பகு தியிலும் ஊழல் அதிகரித்துள்ளது. பிரதான இரண்டு கட்சிகளும் குற்றவாளிகளை காப்பாற்றும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றன . வடக்கினை எடுத்துப்பார்த்தால் வடக்கிலும் இன்று ஊழல் நிறைந்துள்ளது. வடமாகாண சபையின் உறுப்பினர்களே இதனை ஏற்றுக்கொள்கின்றனர்.

அவர்களின் சுயநலவாத அரசியலின் மூலமாக தமிழ் மக்களை பலிக்கடாவாக்கியுள்ளனர். ஆகவே தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் அனைவரும் இன்று ஊழல்வாத அரசியலில் ஏமாற்றப்பட்டு, பழிவாங்கப்ப ட்டு நடத்தப்படுகின்றனர். ஆகவே இந்த நாட்டை நேசிக்கும் அனைத்து மக்களும் இப் போது ஜே.வி.பி. யுடன் கைகோர்த்து நாட்டில் மாற்றம் ஒன்றை ஏற்படுத்த ஒன்றிணையுங்கள். எமது பலம் நாட்டின் வெற்றி என்பதை உறுதிசெய்து மாற்றம் ஒன்றுக்கு கைகோருங்கள் எனவும் அவர் குறிப்பிட்டார்.

Leave a comment