ஆர்.கே.நகரில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் மதுசூதனனுக்கு ஆதரவாக அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்து வருகின்றார்.
ஆர்.கே.நகரில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் மதுசூதனனுக்கு ஆதரவாக இரட்டை இலை சின்னதிற்கு சிவன்நகர், கீரைத்தோட்டம் உட்பட பல்வேறு பகுதிகளில் விருதுநகர் மாவட்ட செயலாளரும், பால்வளத்துறை அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்து வருகின்றார். ஆர்.கே.நகரில் ஜெயலலிதா செயல்படுத்திய திட்டங்களை கூறி இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்து வருகின்றார். சிவன்நகர் முதல் தெரு, கீரைத்தோட்டம் முதல் தெருவில் வீதி வீதியாக நடந்து சென்றும் திண்ணை பிரச்சாரம் செய்தும் வாக்கு சேகரித்தார்.
பிரசாரத்தின் போது இரட்டை இலை சின்னத்தை எதிர்த்து போட்டி யிடும் அனைத்து வேட்பாளர் களும் டெபாசிட் இழப்பது உறுதி. அம்மாவின் ஆன்மா மதுசூதனனை வெற்றி பெற செய்யும் என்றார். அமைச்சருடன் உள்ளுர் கட்சி நிர்வாகிகள், ஏராளமான பெண் வாக்காளர்கள், விருது நகர் மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் நடந்து சென்று வாக்கு சேகரித்தனர். அமைச்சருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு கொடுத்தனர்.